அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி

   

மாஞ்சி ராகம்
ஆதி தாளம்

பல்லவி

அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி அடையுங்கள்
நம் ஆண்டாள் திருவடி அடையுங்கள்   [அ]

அநுபல்லவி

விடையேறும் சிவனாதி தேவர்கள் போற்றும்
நடனகோபாலனிடம் சேர்த்திடுவாள்   [அ]

சரணங்கள்

பவரோக அவதி தீரும் பஞ்சேந்திரியம் ஒன்றாய்ச் சேரும்
தவமாம் நல்வழி கைகூடும்தாரணியோர் வாய்புகழ் பாடும்
சவமாய் உடலம் தரைசாய்ந்திடுமுன்
புவனம்தனில் புத்தூரதனில் சென்றடையுங்கள்   [அ]

தாமசமாம் குணம் ஒழியும் சாகா சஞ்சலம் ஒழியும்
நேமமிகும்வழி தெரியும் நிஜமாகிய பக்தி விரியும்
பாமர வாழ்கையிலே கிடந்தலையாமல்
க்ஷேமம்தரும் புத்தூரதனில் சென்றடையுங்கள்   [அ]

நித்யானந்தவாழ்வு நிலை அடையாதிருப்பதே தாழ்வு
பக்திசெய்திடுவார்க்கே வாழ்வு பலநெறி நடப்பவர்கே தாழ்வு
செத்துப்போமாக்கை நித்யமென்றிருக்காமல்
சித்திதரும் புத்தூரதனில் சென்றடையுங்கள்  [அ]

தன்னருட் காளாயிடலாம் தாஸர்களுக்குத் தாஸனாகலாம்
விண்ணவர் கிருபைக்காளாயிடலாம் வீதிகள்தோறும் பாடி ஆடலாம்
எண்ணம்பல வழிநண்ணி கெட்டலையாமல்
அண்ணல் செழும் புத்தூரதனில் சென்றடையுங்கள்   [அ]

கேட்ட வரம்தனை அளிப்பால் கிருபாசாகரமாய் இருப்பாள்
கூட்டங்கூட்டமாய் அழைப்பாள் கொணர்ந்து ஸமர்பித்ததே வகிப்பாள்
சேட்டைவளர் ஜெகம்தனில் திரிந்தலையாமல்
ஆட்டமிகும் புத்தூரதனில் சென்றடையுங்கள்   [அ]

இகபர வாழ்வு பலிக்கும் எண்ணமது நல்வழி நிலைக்கும்
சுகமென்மேலும் பலிக்கும் தொண்டுசெய்திடும் பக்தி வலுக்கும்
இகவாழ்வே சகமென்றிடரடையாமல்
அகமகிழும் புத்தூரதனில் சென்றடையுங்கள்   [அ]

இருவினையும் குடிவாங்கும் இகமேற் பற்பல இடர் நீங்கும்
குருவருளும் தானோங்கும் கோபாலன் திருவடி தலை தாங்கும்
வறுமைதரும் வையம் திரிந்தலையாமல்
அரி அருளாய் புத்தூரதனில் சென்றடையுங்கள்   [அ]

பந்தமறும் பாத்தியமாம் பரமானந்த ஹிருதயமாம்
அந்தகன் வந்தனம் செய்வான் ஹரிவந்து கொடு நெறிசெய்வான்
இத்தவகிலமே சொந்தமென் றலையாமல்
அந்தமிகும் புத்தூரதனில் சென்றடையுங்கள்   [அ]

மிடியாரிருவினைகள் பொடியாம் மேலாமிட மேறப்படியாம்
நெடியோனடி குடியாம் நீங்கா செல்வத்துக்கடியாம்
படிவாழ்வதென அப்படி அலையாமல்
அடியார் மகிழ் புத்தூரதனில் சென்றடையுங்கள்   [அ]

துன்பவினை ஓடி வரும் துணை தொண்டருள் கிருபை நாடி வரும்
இன்பகவி பாடவரும் ஹிருதயம் ஒளிவுதயமாகும்
துன்ப சரீர போகம் இன்பமென்றடையாமல்
அன்பர்குழாம் புத்தூரதனில் சென்றடையுங்கள்   [அ]

வித்தமதருளும் கைசேரும் விளையும் துன்பவினை தீரும்
நித்தமும் கைங்கர்யம் நேரும் நெஞ்சமதிலே வஞ்சம் தீரும்
பித்தமர் உலகதனில் திரிந்தலையாமல்
அத்தன் தரும் புத்தூரதனில் சென்றடையுங்கள்   [அ]

வடபத்ராரியர் அருள்பெறலாம் மலராள் சந்நதிக்கே பெறலாம்
நடனகோபாலன் கிருபை பெறலாம் நாயகியார் எனும் பேர் பெறலாம்
சடலமதை நம்பி கெட்டலையாமல்
திடவில்லிபுத்தூரில் சென்றடையுங்கள்   [அ]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube