| |
|
அன்னம் புசியென்றுரையாதே
|
|
|
|
கண்ணிகள்
அன்னம் புசியென்றுரையாதே அகன்றுபோடி
அன்னம் விஷமாயிருக்கிற தறிந்துகொள்ளாய்நாடி [அ]
புன்னை மரத்தடியில் பெண்கள் புலம்பச்செய்த சோரன்
என்னை மறந்தானோ இப்போ திக்குலவுபகாரன் [அ]
ஆள்செய்யாமலே நாளிங்கே அகன்றுபோகுதேடி
வாழ்விப்பானென்றேயிருந்தேன் மாயஞ்செய்தானேடி [அ]
தாகநீரேனுங்கொள்ளெனச் சாற்றுகிறாயிங்கே
தாகமடங்குமோ தாமோதரனைக்காணாதிங்கே [அ]
சொல்லாதே அடைக்காயமுதால் சுகமென்னேடி
எல்லாருக்கும் தெரியுமே யென்னிதயகீ தன்றோடி [அ]
கண்ணேறுபடும்படி யெங்கெங்கே செல்கிறானோ
நண்ணப்போயழைத்துவாடி நான்காணாதுய்வேனோ [அ]
திடுக்குத்திடுக்கென வென்னெஞ்சம் திகிலடைகுதிங்கே
அடுக்குமுறி வெண்ணெய் கண்ணனுக் கமுதுசெய்வ தெங்கே [அ]
தயிர்கடையும் வேளைவந்து தழுவி விளையாடும்
மயிலிறகே கொண்டையன் மனமென்று நம்பால் நாடும் [அ]
மழையில்லாப்பயிர துபோல் நான் மயங்குவேனோடிவாடி
களையெடுக்கா தபயிர்கள் தலையெடுக்குமோடி [அ]
செழித்திருந்தேனே கண்ணனை சேவிக்கம்போதெல்லாம்
குழைத்துக்கிடக்கின்றன பார் குழக்கன்றுகளெல்லாம் [அ]
|
|