என்னகோபமோ இன்னும்

   

ஆனந்தபைரவி ராகம்
ஆதி தாளம்

பல்லவி

என்னகோபமோ இன்னும் மன்னவ ஸ்ரீ கிருஷ்ணா
இரட்சிக்க நினைவில்லையோ   [என்ன]

அநுபல்லவி

சொன்னோமெங்கள் துயரை என்ன செய்தாலுசரி
சின்னத்தனமுனக்கே ஸ்ரீகிருஷ்ணா   [என்ன]

சரணங்கள்

முன்னமெங்கள்தமை நீகட்டியணைத் தன்பாய்
முத்தமிடவில்லையோ
என்னசெய்குவோமினி ஆசைமோகலாகிரி
எங்களைவிடவில்லையே ஸ்ரீகிருஷ்ணா   [என்ன]

சிந்தாகுலமதைக் கோஇந்தா ஒழிப்பதற்கு
சித்தத்தில் கொள்ளவில்லையோ
செந்தாமரை மலர்த்தாளனே எங்களை நீ
சேரற்பாபமோ சொல்லய்யே ஸ்ரீகிருஷ்ணா   [என்ன]

விடுகிலோமென்றன்றுன் திருவாக்கதனாலே
விளம்பிக் கலந்ததில்லையோ
கெடுமதியுனக்கேன்காண் படுதுன்பமதைத்தீர்க்க
கிருபை நெஞ்சினிலில்லையோ ஸ்ரீகிருஷ்ணா  [என்ன]

ஏகநினைவா மோகக்கடலில் மூழ்கி
இன்பம் சுகித்ததில்லையோ
நாகமேலாடிய நடனகோபாலனென்று
நடித்தருளியதில்லையோ ஸ்ரீகிருஷ்ணா   [என்ன]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube