கண்ணன் எப்போது வருவானடி

   

புன்னாக வராளி ராகம்
ரூபக தாளம்

கண்ணிகள்

கண்ணன் எப்போது வருவானடி கலந்து சுகம்பெறவே
நண்ணியவித்துன்பவினை நாசமதாயறவே   [க]

எண்ணம் அறிந்ததுபோலே யின்பமீவானோடி--ஆ
எண்ணம் இழுத்துக்கொண்டு நம்மோடிருப்பான் கூடி   [க]

எண்ணம் இங்கெங்கேயிருக்கு இருடிகேசன் மேலே
எண்ணத்தரமோ அவன் தன் லீலைகள் நம்மாலே   [க]

விண்ணவர்களுக்கமுதம் விரும்பித்தந்தானேடி
அண்ணலேடி நமக்கினிமேல் ஆரேடிபோடி   [க]

அய்யன் திருவடி பணிவார் அவரே நங்கள் தெய்வம்
பொய்யல்ல மெய்யீ தறிவாய் போயழை நாமுய்வம்   [க]

ஏடிவிட்டுப் போனானிங்கே என்செய்வேன் சந்திரமுகியே
போடியவனெங்கேயோ நீபோயழையென் சகியே   [க]

வயிறெரியுதெங்ஙனம்போ யெவரிடத்தில் விழுவேன்
இயம்பியவார்த்தைகளை நான் எங்ஙனம் சொல்லி யழுவேன்   [க]

பொய்யுரைப்பானோ உரையாய் பொன்னரங்க னென்பால்
பையரவின்மேல் நடித்த பாதனேடியன்பால்   [க]

நடித்ததிருவடி பணிந்து நங்காயழைபோடி
முடித்தமுடி அவிழ்த்திட யாரால் முடியும் போடி   [க]

கண்ணீர் ஆறாய்ப்பெருக வவன்காடாது சென்றானே
பண்ணியதவப்பயனோ பரதவிக்கின்றேனே   [க]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube