| |
|
|
|
ஆனந்தபைரவி ராகம்
ஆதி தாளம்
|
|
|
பல்லவி
கண்ணுக்குள் வைத்திருந்தானேடி
கண்ணன் எம்மைக் [க]
அநுபல்லவி
புண்ணாய் மனம் நோகவையோ
அண்ணல் போகலாமா வுய்யோம் [க]
சரணங்கள்
கூடிமகிழ்ந்திருந்தானேடி கண்ணன் எம்மைக் (கூடிமகிழ்ந்)
பாடியோரெல்லாம் மயங்க
ஓடிச்செல்லலாமோ மனங்கலங்க [க]
கட்டியணைக்கும் கையனேடி அன்பாயெம்மைக் (கட்டி)
எட்டெழுத் தோதுவாருள்ளம்
கட்டுமலம்போக்கும் வள்ளல் [க]
காக்குநற் கருணையோனேடி சேதனர்களைக் (காக்குநற்)
கோக்களை மேய்க்க வந்தானே
யார்க்குமெளிதாய்த் தந்தானே [க]
தாபம்தீர்க்கும் தண்பாதனேடி ஜெனன மரண (தாபம்)
சாபமுற்ற அலியை தன்
ஆபத்து தீர்த்தாரறிமின் [க]
இடபங்கறந்தமாலேடி யெங்களாசையினால் (இடபங்கறந்)
புடவை சென்னிமேற்கொண்டு
யடனமாடிய விண்டு [க]
|
|