மாதவனடியாரை மனம்நோகப்

   

முகாரி ராகம்
ஸாபு தாளம்

பல்லவி

மாதவனடியாரை மனம்நோகப் பண்ணினால்
மாடாடு ஜன்மம் மருவும்   [மா]

அநுபல்லவி

பாதகம்வேறில்லை யாதவனடியாரை
பழித்திடுவதுதான் கருவம்   [மா]

சரணங்கள்

எப்பாவங்களும் தீரும் அப்பன் கோவிந்தனடி
யாரை இகழ்ச்சியாய்ப் பேசும்
இப்பாவந் தீராது எப்போதும் நரகத்தில்
இருக்கும்டி நேரும் மோசம்  [மா]

கிடைக்குமோ மானிட ஜென்மம் கிடைத்ததற்கு
அடைது இதுதானோ சொல்வீர்
முடவனாய்ப் பிறந்தாலும் தடையில்லை மோக்ஷத்திற்கு
முகுந்தவனுடைய நாமம் சொல்வீர்   [மா]

வீடடைந்தோமென்றே மாந்திடவேண்டாம்ஓய்
வெறுவாய் வெகுளி வார்த்தை பேசி
கேடடைந்தது போதாதே இனிமேலும்
கதிபெறப் பாருங்கள் வாசி   [மா]

விடத்துக்கொப்பான மாய்கை இடத்திலகப்பட்டு
வீணாகக் காலம் போக்குகின்றீர்
வடபத்ராரியர் போற்றும் நடனகோபாலன் நாமம்
உரைப்பீர் வைகுந்தம் சேர்வீர் நன்றே  [மா]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube