| |
|
பாராய்பாங்கி பாராய்பாங்கி
|
|
|
|
பல்லவி
பாராய்பாங்கி பாராய்பாங்கி
பரமபுருஷனைத் தேடிப் [பா]
அநுபல்லவி
ஆரே நமக்கு அருந்துணையாவார்கள்
தேராய்சீராய் நேராய் நீபோய்ப் [பா]
சரணங்கள்
நித்தியமுத்தர்கள் தொழுதேத்திடு திருமலன்
நீடிய உலகமுண்டாக்கிடும் பராத்பரன்
சத்யவேதங்களும் துதிசெயு மறைச்சாரன்
சங்கசாரங்க சக்கரமுடைக் கெம்பீரன் [பா]
தோள் அழகென்சொல்வேன் மார்பழகென்சொல்வேன்
தூமுறுவலினழகது என்சொல்வேன்
தாள் அழகுந்தழுவுக்கை யழகன்சொல்வேன்
தையலர்களுய்யச் செய்யுமையலென் செய்வேன் [பா]
வாசுதேவ கோபால நாராயணன்
வணங்கிடும் அன்பர்கள் நாமபாராயணன்
தாசிகள்பால் கிருபை பரிபூரணன்
தயைபுரி அபயந்தரு ஜெகத்காரணன் [பா]
கடைதேற்றிடும் ஸ்ரீநிவாச பூபாலன்
கரிராசனுக்காய் வருமாதி மூலன்
வடபத்ராரியர் தொழும் நடனகோபாலன்
வார்த்தைபொய்யாமோ எம்வார்த்தைகேள் நம்லோலன் [பா]
|
|