| |
|
பரதவிக்கவிட்டதினால்
|
|
|
|
கண்ணிகள்
பரதவிக்கவிட்டதினால் பலனென்ன மண்மேலே
முரளிகானம்செய்தே நம்மை மோகிப்பித்தமாலே [ப]
மால்செய்தேநம்மைப்பிரிந்த மா தவனெங்கேடி
கால்கள் நோவச்சென்றானே கண்ணனைத் தேடிப் போடி [ப]
ஆசையைத்தந்துளமறிய அநீதம் பண்ணலாமோடி
பூசைபுரிந்தோமே பலன் பொருந்தினதிதுவோடி [ப]
போவானென்று தெரிந்திருந்தால் போகவிடுவேனோ நீ
ஆவலுடன் தேடிப்பிடி அவதிப்படுவேனோ [ப]
மடிந்திடக்காலம் வந் ததே மடிந்தாலும் சுகமோடி
முடிந்திடவந்தானே ஜகன்மோகன னெங்கேபோடி [ப]
கம்பமற்ற காகம்போல் நான் கலங்குவேனோ தோழி
செம்பவளவாயன் தரச் சேர்வேனோசங்காழி [ப]
சங்காழிகளைப்பிடித்த சர்வலோகதேகி
இங்காழிவண்ணனை த்தர நீயே திருவாகி [ப]
அயனரனிந்திரா திகளை ஆக்கியகோபாலன்
நயனங்கள் தோறும் விளையாடும் நங்கள் பூபாலன் [ப]
நட்டாற்றில் கைவிட்டாற்போலே நம்மை செய்திட்டானே
ஒட்டாமல் திரிந்த எங்கள் உளமயக்கிவிட்டானே [ப]
மயக்கமது மென்மேலும் வளருதேடிபாவாய்
நயனங்கொண்டருளுவானோ நானென்செய்வேன் காவாய் [ப]
|
|