பரிமேல் வரும் அழகா

   

தன்யாசி ராகம்
ஆதி தாளம்

பல்லவி

பரிமேல் வரும் அழகா பாதமருள்வாய்
பரிமேல் வரும் அழகா [பரி]

அநுபல்லவி

சிறியேன் படும்துயரை அறியாயோ செங்கண்மால்
ஹரியே உன் திருவடியே அடியேற்கு துணை [பரி]

சரணங்கள்

கண் பாராய் அழகா கருமமற
கண் பாராய் அழகா
கண் பாராய் எந்தன் கவலையொழிந்திட
விண்மண் அளந்த திருவடியுடைய விமலா [பரி]

துணையார் எனக்கழகா தொண்டு கொள்வாய்
துணையார் எனக்கழகா
துணையாய் எனக்கு உந்தன் இணையடியல்லால் ஆயர்
மனைதோறும் புகுந்து வெண்ணெய் உண்டவாயா [பரி]

கடைத்தேற்றும் அழகா கருணைவைத்து
கடைத்தேற்றும் அழகா
கடைத்தேற்றாய் என்னை காலன் கையிலிடாமல்
இடையர்குலம் உய்வித்த நடனகோபாலா


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube