ராம ராகவா ஸீதா ராமராகவா

   

கல்யாணி ராகம்
ஆதி தாளம்



பல்லவி

ராம ராகவா ஸீதா ராமராகவா
நாமோராயிர பரந்தாம சேம நல்குவாய்

அநுபல்லவி

நம்பினேன் உன்னை இவ்வம்புவியினில் செம்பொற் பாதம்
நம்பாதார்க்கின்ப மெப்படி கொடுப்பாய் [ரா]

சரணங்கள்

வந்தெனையாளாய் கோவிந்தா முகுந்தா சிந்தை நொந்தேன்
பந்தவினை எந்தனைவிட் டோடச் செய்வாய் [ராம]

காயம் நிற்குமோ செவ்வாயனே அருள் ஆயர் குலம் வந்து மாயம்
நேயமதாய் செய்த வெங்கள் [ராம]

கன்ன செய்குவேன் இதற்கென்ன செய்குவேன் முன்னம்
எண்ணிறந்த பாவம் பண்ணினேன் மன்னித்தருள்வாய் [ராம]

தேவதேவனே மூவர் முதல்வனே
கோபம் செய்தால் இங்கே எந்தன் பாவமெப்படித்துலையும்[ராம]

ஆடவருவாய் நினைந்தாடவருவாய்
கூடலழகன் எனை கூடிவாழ்வதற்கெண்ணினேன்[ராம]

ஆயரமுதமே ஆயர்வாயமுதமே
நானெனும் ஆணுவமற ஞானமோன மெனக்கருள்வாய்[ராம]

ஓடுதே நெஞ்சம் கைகூடுமோ நெஞ்சம்
மூடருனைப் பாடியாடி தேடவருவாரோ சொல் [ராம]

கெடவிடாதேகை உந்தனடி பிடித்தேன் மெய்
நடனகோபாலா உனக்கே நாயகிநான் வேறறியேன்[ராம]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube