| |
|
திருமங்கைமார்பன்
|
|
நாதநாமக்ரியா ராகம் ரூபக தாளம்
|
|
|
கண்ணிகள்
திருமங்கைமார்பன் திருமலைகள் ஏழுடையோன்
திருவரங்கஸ்தலமுடையோன் திருப்பதிகளுடையோன் [தி]
திருவவதாரமீரைந்தும் செக தலத்தில் செய்தோன்
திருபா ற்கடலைக்கடைந் தமுதமழை பெய்தோன் [தி]
திருக்கைகளாலேசிவன் தன் வில்லிரண்டாய் யுடைத்தோன்
திருமகளாகிய சீதாதேவியின் கைபிடித்தோன் [தி]
கோவர் த்தனமேந்தியகையன் கோபாலதுய்யன்
ஆபத்து தீர்த்தருளியநம் ஆயர்குலத்தையன் [தி]
அங்கத்துடனே சகல ஆக்கைகளுண்டாக்கும்
பங்கயத்தயன் பணியும் பரமன் என்னைப் பார்க்கும் [தி]
சேலையை நீக்கியென்னைச் சேரும் சீலனைப் பாராய்
ஆலைக்கரும்பதுபோல நான் ஆனேனல்லல் தீராய் [தி]
அவரவர்கள் எண்ணம்போல் அநுக்கிரகங்கள் செய்யும்
சிவனுடைய செங்கையின் சிரமமதைக்கொய்யும் [தி]
துக்கங்களுக்கிருப்பிடமாய்த் துலங்குதேயென்நெஞ்சம்
நிற்கவைக்கக்கூடவிலை நீலமேகன் தஞ்சம் [தி]
நீவாததீபமென முன்னின்றதே யென் நெஞ்சம்
கோவர்த்தனக்குடைபிடித்த கோவலன் தாள் தஞ்சம் [தி]
ஆற்றங்கரைத்தீபமென அலைகுதேயென்நெஞ்சம்
நாத்தழும்பேறத்துதிக்கும் நல்லவர் தாள் தஞ்சம் [தி]
|
|